அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில்மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனைஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மைஉண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்”என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம்ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : திர்மிதீ (2835)
இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்
பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்
ஆதாரமான ஹதீஸ்கள்
விரண்டோடும் ஷைத்தான்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகைஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது)அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பாளர்:அபூஹரைரா(ர)
பரிந்துரை செய்யும் அத்தியாயம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள் ஏனெனில்குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரைசெய்யும் இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இருஅத்தியாயங்களையும் ஓதிவாருங்கள் ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல்தரும்மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப்போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள் அதைக் கையாள்வது வளம் சேர்க்கும்அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன்செயழந்துபோவார்கள்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி)
நூல்: முஸ்ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186
இறைவனிடம் வாதம் செய்யும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவருர்களும்அழைத்து வரப்படுவார். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான்அத்தியாயமும் முன்னே வரும் என்று கூறிவிட்டு இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னேவருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக்கூறினார்கள்.அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும்(நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஓளியுள்ள இரு கரும்நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக்கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக(இறைவனிடம்) வாதாடும்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979
ஷைத்தானை விரட்டும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் வானம் பூமியை படைப்பதற்கு ஆயிரம்வருடத்திற்கு முன்பு ஒரு கிதாபை எழுதினான் அந்த கிதாபிருந்து இரண்டு ஆயத்தைஇறக்கி சூரத்துல் பகராவை முடித்திருக்கிறான் எந்த வீட்டில் மூன்று இரவுகள்ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நெருங்க மாட்டான்.
திர்மிதி 2882 தாரமி 3253
இரவு வணக்கத்திற்கு நிகரானது.
அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில்ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்)போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ மஸ்ஊத் (ரலி)
புஹாரி : 4008
பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும். ''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5009.
ஆயத்துல் குர்ஸீ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா?தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ
முந்திய நபிமார்களுக்கு கொடுக்கப்படாத சூரா.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இந்த சமுதாயம் மற்ற சமுதயத்தை விட மூன்றுசிறப்பு படுத்தப்பட்டிருக்கிறது பூமி முழுவதும் சுத்மமாகவும் தொழும் இடமாகவும்ஆக்கப்பட்டிருக்கிறது இந்த சமுதயாயத்தின் வரிசை மலக்குமார்களுடைய வரிசையைவிட சிறந்ததாகும் இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் சூரத்துல் பகராவின்கடைசி இரண்டு வசனங்களையும் அர்ஷின் கீழிருந்து கொடுக்கப்பட்டுள்ளேன் இதற்குமுன் எந்த நபிக்கும் கொடுக்கப்பட வில்லை என்றார்கள்.
நூற்கள்: அஹ்மத் (22167) முஸ்ம் (252) திர்மிதி (3198) நஸயி (447) அஹ்மத் (3483)
மேற்கூறப்பட்ட அஹ்மத் அறிவிப்பை தவிர மற்ற அனைத்து நூற்களிலும் சூரத்துல் பகராவைநான் கொடுக்கப்பட்டுள்ளேன் என்று இடம் பெற்றுள்ளது கடைசி ஆனால் கடைசி இரண்டுவசனம் என்று இடம் பெற வில்லை.
ஆதாரமற்ற ஹதீஸ்கள்
சூரத்துல் பகரா இல்லாத வீடு ஒன்றுமில்லாத வீடு.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் உங்களில் ஒருவர் ஒருகாலுக்கு மேல் கால் போட்டு இசை கேட்பார் அவர் குர்ஆனை கேட்பதை விட்டு விடுவார்எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அந்த வீட்டை விட்டு ஷைதான்விரண்டோடுகிறான் வீடுகளில் ஒன்றுமில்லாத வீடு எந்த வீடு குர்ஆனை விட்டு காயாகஇருக்கிறதோ அந்த வீடுதான்.
நூல்: தாரமி (3258)
இந்த செய்தி மவ்கூப் பாகவும் மர்பூஃ ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது மவ்கூப் ஆன செய்திஆதாரமாக அமையாது ஆனாலும் மர்பூஃ ஆக வரக்கூடிய செய்தி ஆதாரப்பூர்வமாக இருப்பதால்இந்த செய்தி ஆதாரமாகும்.
பைத்தியத்தை நீக்கும் சூரா.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஒருசகோதரர் இருக்கிறார் அவருக்கு நோய் இருக்கிறது என்றார் என்ன நோய் என்றார்கள்பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொன்னார் நபி (ஸல்) அவர்கள் அவரை தன்னிடம்கொண்டு வா என்று சொன்னார்கள் அவர் அவரை கொண்டு வந்து நபி (ஸல்)அவர்களுக்கு முன்னால் வைத்தார் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சூரத்துல்பாத்திஹாவையும் சூரத்துல் பகராவின் முதல் நான்கு வசனங்களையும் இலாஹ‚கும்இலாஹ‚வ் வாஹித் என்ற ஆயத்தும் ஆயத்துல் குர்ஸியும் சூரத்துல் பகராவின் கடைசிஆயத்தும் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்தில் ஷஹிதல்லாஹ‚ அன்னஹ‚லாயிலாஹா இல்லா ஹ‚வ என்ற ஆயத்தும் சூரத்துல் அஃராபில் இன்ன ரப்பகுமுல்லாஹ‚ல்லாஹ‚ல்லதி எனத் தொடங்கும் ஆயத்தும் சூரத்துல் முஃமினின் கடைசிவசனமான பதஆலல்லாஹ‚ எனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஜின்னில் வஅன்னஹ‚ தஆலா எனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஸாப்பாத்தில் முதல் பத்துவசனமும் சூரத்துல் ஹஷ்ர் ரில் கடைசி மூன்று வசனமும் குல் ஹ‚வல்லாஹ‚ என்றஆயத்தும் முஅவ்விததைன் எனும் குல் அவூது பிரப்பில் பலக்கும் குல் அவூதுபிரப்பின்னாஸ் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள் பின்பு அந்த மணிதர்நோயுராதவரைப் போன்று ஆகிவிட்டார்.
அறிவிப்பவர்: உபை பின் கஃபு (ர)
நூல்: அஹ்மத் (20237)
இந்த செய்தியில் உன்ர் பின் அ என்பவரும் அபீ ஜனாப் என்பவரும் இடம் பெற்றுள்ளனர்இவ்விருவரையும் அறிஞர்களும் குறை கூறியுள்ளனர்.
அறிஞர் அஹ்மத் அவர்கள் இவர் தத்லீஸ் செய்பவர்
No comments:
Post a Comment
Please Add Your Comments