meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Tuesday, May 31, 2011

கிரிக்கெட்



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம்? வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அபிசீனியர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் உமரே! அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)

Sunday, May 29, 2011

கணவன் மனைவி இருவருமே டென்ஷன் பார்ட்டியா?


[ கணவருக்கு மட்டுமல்ல... மனைவிக்கும் டென்ஷன் உண்டு என்பதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவர் எவ்வளவுதான் டென்ஷனாக இருந்தாலும் மற்றவர்களிடம் "இவர் டென்ஷன் பார்ட்டி" என்று மனைவி சொல்லவே கூடாது. அதுபோலத்தான் கணவனும் மனைவியைப் பற்றி மற்றவர்களிடம்.....]
கோபமும், ஆத்திரமும் கலந்த எந்த வேலையும் உருப்படியாக இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள். சின்ன விஷயங்களுக்கெல்லாம் மூக்கின் நுனியில் கோபத்தையும், பதட்டத்தையும் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருந்தாலே அந்த வீட்டில் டென்ஷன் அரங்கேறும். எப்போதும் பதட்டமாய் காணப்படுவார்கள் குடும்பத்தில், அவர்கள் காதலித்து விவாகம் செய்திருந்தாலும் கூட இந்த விஷயத்தில் தப்பித்துவிட முடிவதில்லை.
காரணம், ஆரம்பத்தில் ஒருவர் மற்றவருக்கு கூறும் அன்பு வார்த்தைகளில் மயங்கி அவர்களின் மறு பக்கத்தைத் காணத் தவறி விடுகின்றனர். காலப் போக்கில் பிள்ளைகளும் பிறக்க, பிரச்சனைகளும் கூட ஒவ்வொருவரும் தங்கள் மறுபக்கத்தை காட்ட வெளிக்கிடுகிறார்கள் அப்போதுதான் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகின்றது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், அதனால் பிரிவினையும் தவிர்க்க முடியாததாகின்றது.
முக்கியமாக சில குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சனையை உண்டாக்க அவர்களின் அப்பா, அம்மாவும் சில சந்தற்பங்களில் காரண கர்த்தாவாகி விடுவதையும் நாம் காணக் கூடியாத உள்ளது. அதுபோல அவர்களின் சகோதரங்களும் எப்படியோ பங்கெடுத்து விடுகிறார்கள். பொதுவாக சில பெண்கள் தமது உறவினர்களுக்கு உதவி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் கணவன் வழி உறவினர்களுக்கு உதவி செய்வதாயின் முகம் சுழிக்கத் தொடங்குகின்றது.

கணிணி கற்றுத் தரும் இஸ்லாம்


[ தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பெறுமதிமிக்க இஸ்லாமிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கணிணி மென்பொருள்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு.
அரபுதெரிந்த மௌலவிமார்களின் ஆய்விற்கு பயன் படக்கூடிய மென்பொருள்கள் இன்று ஏராளமாக இலவசமாகக் கிடைக்கின்றன. என்றாலும் கவலைக்கிடமான நிலையாதெனில் அதிகமான மௌலவிமார்கள் கணிணிகள் இருந்தும் இம்மென்பொருள்களின் பெயர்கள் கூடதெரியாமல் இருப்பதுதான்.
அல்லாஹ் எமக்குத்தந்துள்ள அருள்களை உணர்ந்து கணிணியின் மூலம் ஈருலகப்பயன் பெற்றவர்களாக ஆகவேண்டும்.]
கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்துறை... என எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும்.
ஒருவர் ''AUTO CAD'' என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு முறையைக் கனணியில் வரைகிறார் ஆனால் அவர் ஒரு சாதாரண படத்தைக் கூட கையால் வரைய முடியாதவராக இருப்பார். ஆக தேர்ச்சியில்லாத துறைகளிலும் மிகத்தேர்ச்சியாக தொழில் புரிய வைத்ததும் வேலை வாய்ப்பின்மை என்றகுறையை பெருவாரிய தீர்த்துவைத்ததும் கணிணிதான்.

Friday, May 27, 2011

வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணை ஒடித்து விடாதீர்கள்!


வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணை ஒடித்து விடாதீர்கள்!

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."(நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "பெண், விலா எலும்பைப் போன்றவள், அவளை நீ நிமிர்த்த நினைத்தால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய்.
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள்.

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம், சவூதியில்!


சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் 15-05-2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50,000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் காட்சியளிக்கிறது. 12,000 மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள். மன்னர் அப்துல்லாஹ்வும் ரெயிலில் அமர்ந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

Tuesday, May 24, 2011

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.



''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)


''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160

இஸ்லாத்தில் வாரிசுரிமைச் சட்டம்...!!!


இன்று முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அல்லது அமுல்படுத்தப்படாத மிக முக்கிய ஷரீஆ சட்டங்களில் ஒன்றாக "வாரிசுரிமைச் சட்டம்" விளங்குகின்றது. 

வாரிசுரிமைச் சட்டம் பற்றிய ஆழமான அறிவு, அதன் முக்கியத்துவம் மற்றும் அதைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவற்றவர்களாக நாம் இன்று விளங்குகின்றோம்.
தெற்காசியாவின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனத்தின் தலைவருமான ஷேய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள், வாரிசுரிமைச் சட்டம் பற்றிய ஆழமான விளக்கமொன்றை வழங்குகிறார்:  

Monday, May 23, 2011

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி....?!


என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.

ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.

சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் பின்பு நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.

ஒரு சாதாரன ஹிந்துக்களிடம் எத்தனை கடவுள் இருக்கிறது என்று கேட்டால்? ஒருவர் சொல்வார் மூன்று என்று, மற்றவர் சொல்வார் முப்பது என்று, மற்றொருவர் சொல்வார் மூவாயிரம் என்று இப்படியே போய் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்றும் சில பேர் சொல்வார்கள். ஆனால் இந்து மத வேதங்களை படித்த மேதையிடம் கேட்டால் கடவுள் ஒன்று தான் என்று கூறுவார். இன்று எல்லா ஹிந்துக்களும் நம்பக்கூடிய ஒரு விஷயம் தான் கடவுளின் அவதாரம் என்பது. ஹிந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் இத்தகைய அவதார புருஷர்கள் நிறையவே உண்டு. உதாரணம் இராமன், கிருஷ்ணன். இவர்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும், இவர்கள் பூமியில் அசத்தியத்தை அழிப்பதற்காக மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள் என்றும் நம்புகின்றனர்.

சூரத்துல் பகராவின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில்மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனைஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மைஉண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்”என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம்ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி­), நூல் : திர்மிதீ (2835)


இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்
பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்

ஆதாரமான ஹதீஸ்கள் 
விரண்டோடும் ஷைத்தான்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகைஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது)அத்தியாயம் ஓதப்படும் இல்லத்தி­ருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பாளர்:அபூஹரைரா(ர­) 

நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487 , 8089, 8560, 8681

தடை செய்யப்பட்ட தீமைகள்


1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

What others said about Islam!


Those who listen to the word and follow the best of it; those are the ones whom God has guided, and those are the ones endowed with understanding (Holy Qur'an 39:18).

This is a collection of short quotations from a wide variety of Non-Muslim notables, including academics, writers, philosophers, poets, politicians, and activists belonging to the East and the West. To our knowledge none of them ever became Muslim. These words, therefore, reflect their personal views on various aspects of the religion of Islam.

Bertrand Russell


Mahatma Gandhi
Bertrand Russell (1872-1970) British philosopher, mathematician, and Nobel laureate, whose emphasis on logical analysis greatly influenced the course of 20th-century philosophy.
"Our use of the phrase 'the Dark Ages' to cover the period from 699 to 1,000 marks our undue concentration on Western Europe... From India to Spain, the brilliant civilization of Islam flourished.
What was lost to Christendom at this time was not lost to civilization, but quite the contrary... To us it seems that West-European civilization is civilization; but this is a narrow view." (History of Western Philosophy, London, 1948, p. 419)
Freelance Jobs