meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Saturday, December 18, 2010

யார் இந்த அஹ்மத் தீதாத்?

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
 
அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

கருவறையின் மூன்று இருட்திரைகள்!

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنْ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَسورة الزمر 39:6
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காகக் கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகள்) ஜோடி, ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள்? سورة الزمر 39:6
டாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே!
தாயின் அடிவயிறு (Abdominal wall)
கருப்பையின் சுவர் (Uterine wall)
குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)

உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டிகள் 
 ‘முக்தா’ படிதரத்தில் கரு உள்ளபோதே அதனை ஒரு கத்தியைக் கொண்டு வெட்டினால், அதன் உள்ளுறுப்பு இருகூறாக வெட்டப்பட்டு விடும். அப்பொழுது அக்கருவிற்குள் பெரும்பாலான உறுப்புகள் உருவாக்கப்பட்டதையும், அதே நேரத்தில் வேறு சில உறுப்புகள் உருவாக்கப்படாமலும் இருப்பதை கண்டு கொள்ளலாம்.

இஸ்லாம் தனிமனிதச் சொத்தல்ல

எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து, சரிந்து விட்டதால், வேலை தேடி வெளிநாடு செல்லும் நிர்பந்தம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட போது, உலகின் பல நாடுகளும் இலங்கை குடி மக்கள் சென்று வந்தார்கள். நானும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முனைந்த போது, சவூதி அரபியாவிற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது சவூதி வந்து சுமார் 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை.

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

Thursday, December 16, 2010

List of Muslim scientists (Names list)


Science in the Islamic world has played a significant role in the history of science. There have been hundreds of notable Muslim scientists that have made a great contribution to civilization and society. The following is an incomplete list of notable Muslim scientists.

Astronomers and Astrophysicists

Further information: Islamic astronomy

குழந்தைகளின் குணாதிசியங்களும்...

குழந்தைகளின் குணாதிசியங்களும் அவர்களைக் கையாள வேண்டிய முறைகளும்

குழந்தைகளின் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாயக் கடமை. அவ்வாறு புரிந்து கொண்டால்தான் நல்ல வாரிசுகளாக அவர்களை வளர்க்க - வார்த்தெடுக்க முடியும்.
குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
o பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.

சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள்..!

[ நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.படிப்பது - போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும்.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

Monday, December 13, 2010

பதில் தருமா பரிணாமம்..?

ஓரிறையின் நற்பெயரால்
   மனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.எனினும் பரிணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.அத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...

பரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே "பரிணாமம்" குறித்த எளிய முன்னுரை
அதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்  
ஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு

Sunday, December 12, 2010

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"
அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. 
கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"
எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 
ஆயத்துல் குர்ஸி:

"
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).

Friday, December 10, 2010

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.

தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.

Thursday, December 9, 2010

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு!

ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி! 
கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: – இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும்.

Monday, December 6, 2010

மீடியாக்களும் முஸ்லிம் உலகமும்

இன்றைய மீடியாக்களை ஒரு வரியில் சொல்லுதென்றால்,’கருப்பை வெள்ளையாகவும் வெள்ளையை கருப்பாகவும் சித்தரிக்கும் ஒரு ஊடகம்’


கால் பந்து வீரர்களுக்கிடையில் சிக்குண்டு அங்கும் இங்கும் அடித்து உதைக்கப்படும் பந்துக்குச் சமமானவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் அல்லது முஸ்லிம் பெயர் தாங்கி உண்மையை வாய் திறந்து பேசினால் அவனுக்கு உலக மீடியாக்கள் சூட்டும் பெயர் தீவிரவாதி.

உலக மீடியாக்களுக்கு இருக்கும் முக்கிய பணிகளில் ஒன்று உலக முஸ்லிம்களை தீவிர வாதிகளாக, சமூக விரோதிகளாக, பிரச்சினைகளின் ஆணி வேருகளாக சித்திரிப்பதாகும்.

ஒரு மிஸ் கோல்...!

பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய மிஸ் கோல் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விடயத்திற்கு எங்களை திசைதிருப்புகின்றோம்.

எமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு எமக்கு பயனளிக்கின்றது என்று எம்மால் உறுதிப்படுத்துகின்றோமா என்றால் சத்தியமாக இல்லை.

சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கோல்கள் வந்துகொண்டே இருக்கும், பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து அதை வாங்கி பாவிக்கின்றோம்.

Saturday, December 4, 2010

Prophet Muhammad the most profound & influential human being

Muhammed The Most influential single figure in human history

இறப்பின் சோகம் இதயத்தில் இருந்தாலும். இறைத்தூதர்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர' என்று சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆதாரம்; நூல் புஹாரி எண் 5345


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில்

‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3)

‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19)

‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)

இது போன்ற பல வசனங்களில் தான் அங்கீகரித்துள்ள வாழ்க்கை வழிமுறைகளை மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக் கொள்ளும் அடியார்களுக்கு முஸ்லிம்கள் என்று அல்லாஹ்வே அழகிய பெயரிட்டுள்ளான்.

Wednesday, December 1, 2010

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து.

குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை. 

 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.

 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
Freelance Jobs