meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Wednesday, December 30, 2009


இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்களின்


தாருல் ஹுதா, சென்னை



    இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.



    அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைச்சியில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்…….

இறைச்சியில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்…….

பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் செல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.
சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.
சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி?
சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது. (உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது. (உதா : தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக்கடலை மற்றும் ஏப்ரிகோட்.)
குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது.
சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

Friday, December 18, 2009

புத்திசாலி மகன்





நியூயார்க் நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும் பயிரிட விரும்பினார்.
அவரோ
வயது முதிர்ந்தவர்; தனியாள். 


பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு மின்மடல் எழுதினார்:
“அன்பு மகன் அஹ்மதுக்கு,
நம் வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.
அன்புடன் 
- உன் தந்தை”


மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:
“என் அருமைத் தந்தையே , தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.
உங்கள் அன்பு மகன்
- அஹ்மது”
அன்று மாலை நான்கு மணியிருக்கும்.
வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின் வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத் தோண்டித் துருவி, தேடு-தேடென்று ‘முக்கியப் பொருளை’த் தேடினார்கள். தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில் சலிப்புற்றுச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது: “அன்புத் தந்தையே,
உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம் சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.
அன்பு மகன் - அஹ்மது”


நன்றி http://www.islamkalvi.com/

Thursday, December 10, 2009

இவரைப்போல ஒரு அண்ணன்..!



இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)

எழுதியவர்/பதிந்தவர்/உரை இப்னு பஷீர்
காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.


காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.
“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.
“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.

Irai Inbam

,iw ,d;gk;.

,iwtDf; nfd;Nw tho;e;jpl
mtd;
jpUg;jpf;nfd;Nw %r;Rtpl> %r;irAk;tpl
,k; Nki[apy; Jtq;fp – vd;
fd;fs; fhDk; J}uk;tiu
rj;jpaj;ij J}tpl !

Ntz;Lk; vdf;nfhU tuk;
Ntz;Lk; vdf;nfhU mUs; !

,f;fdk; Kjy; kUiktiu – ehd;
cd; jpUg;jpapy; jtyNtz;Lk; !

vd; mwpTk; Md;khTk; xd;nwdf; fyf;f
ehd;
cdf; nfd tho Ntz;Lk; !

06-05-2008

Tuesday, December 8, 2009

Amazing Al-Quran


Very interesting findings of  Dr. Tariq Al 
Swaidan might grasp your attention:
Dr.Tarig Al Swaidan discovered some verses in the


Holy Qur'an





That  mention one thing is equal to another,


i.e. men are equal to women.
Although this makes sense grammatically,


the astonishing fact is that the number of
times the word man appears in


 the Holy Qur'an


is 24 and number of times the word


woman appears is also 24,

Friday, December 4, 2009


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஓர் ஓசையற்ற பயணம்!
காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்
பயணி பற்றிய விபரம்: -
தகுதியானோர் : ஆதமின் மகன்!
மூல உற்பத்தி : களிமண்!
விலாசம் : பூமியின் மேற்பகுதி!
பயணச் சீட்டு பற்றிய விபரம்: -
பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!
விலை : முற்றாக இலவசம்!
முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!
பொதி(சுமை) பற்றிய விபரம்: -
ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!
கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!
பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -
மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,
சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்
இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.
பயணம் பற்றிய விபரம்: -
பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.
பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!
இறங்கும் இடம் : மறு உலகம்.
குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!

Friday, November 27, 2009

நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)





நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)

எழுதியவர்/பதிந்தவர்/உரை இப்னு பஷீர்

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.





Apple tree
காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”

Thursday, November 26, 2009

Belief on Tomorrow

ehisa ek;gpf;if

fjputd; fhupUypy; tpopf;fhnjd;W
G+tJ gokha; gOf;fhnjd;W
gokJ G+tha; khwhnjd;W
vdf;F
flystpOk; mjd; EiuastpOk; ek;gpf;ifAz;L !

mnkupf;fh Ml;rpapy; jq;fhnjd;W
vk; Njrk; A+jdpy; rhthnjd;W
[h`pypak; ,dp cyfpy; epiyf;fhnjd;W
flystpOk; mjd; EiuastpOk; ek;gpf;ifAz;L !

#upad; cjpj;jhy; mJ fhiy vd;W
gRtJ
rhjpf;f Kad;why; mJ MFnkd;W
vdf;F
flystpOk; mjd; EiuastpOk; ek;gpf;ifAz;L !

ehisa Afq;fs; ekf;nfd;W
ehLfs; ehsq;fs; NjhUk; ,];yhk; vd;W
ghy];jPDk; ghupRk; vk; fpuPlq;fspy; vd;W
my;yh`;tpd; Mir muq;NfUk; vd;W
vdf;F
flysitAk; mjd; EiuasitAk; tpl ek;gpf;ifAz;L !

21-05-2008
Freelance Jobs