பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
- (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
- ‘அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
- ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
- அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
- எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:1முதல் 6)
மேற்கண்ட இந்த அருள்மறை வசனங்கள் எழுதவும், படிக்கவும் தெரியாத கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு அனைத்தையும் சூழ்ந்து அறியக்கூடிய ஞானமிக்க இறைவானாகிய அல்லாஹ் விடமிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளாகும். இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவெனில் அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகிறான் என்பதே! (சுப்ஹானல்லாஹ்)
அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).
இங்கு அல்லாஹ் அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை என்று கூறுகிறான் கல்வியைப் பற்றி சிந்தித்திருந்தால் நம் சமுதாயம் இன்று அனைத்து சமூகத்தாரையும் பின்னுக்குத் தள்ளியிருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை இதனால் என்ன தீமைகள், ஏன் நம் சமுதாய மாணவ மாணவிகள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள் என்பதை அலசிப்பார்ப்போம் வாருங்கள்!
தீன்குல மாணவ மாணவிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தற்கான காரணங்கள் இதோ
நெம்பர் 1 – பெற்றோர்களும் ஆசரியர்களும்
நாம்தான் ஒழுங்காக படிக்கவில்லை நம் பிள்ளைகளாவது படிக்கட்டுமே என்று தவிக்கும் பெற்றோருக்கு சாதாரண நோட்டு புத்தகம் வாங்குவதற்கு கூட வசதிகள் குறைவாக உள்ளது காரணம் பெற்றோரின் கல்வியறிவின்மைதான்.
நம் சமுதாயத்தின் 5ம் வகுப்பு கீழ் படித்த பெற்றோர்களில் பெறும்பாலும் பீடி சுற்றுபவர்களாகவும், பஞ்சர்கடை, பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளராகவும், ரிக்சா இழுப்பவராகவும் குதிரைவண்டி ஓட்டுனர்களாகவும் தான் வாழ்கிறார்கள் மேலும் 6 முதல் 10ம் வகுப்பு மேல் படித்த பெற்றோர்களில் பெறும்பாலானோர் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாகவும், ஆட்டோ ஓட்டுனராகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வறுமை இவர்களின் பிள்ளைகளை பாதிக்கிறது!
- 6ம் வகுப்பு படிக்கும் மகன் வசதியற்ற தன் தந்தையிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித்தர கெஞ்சுகிறான் ஆனால் போதிய பணவசதியன்மையால் தந்தை முகம் சுழிக்கிறார்!
- 7ம் வகுப்பு படிக்கும் மகள் அடுப்பங்கரையில் இருக்கும் தன் வசதியற்ற தாயிடம் ஒரு நோட்டு புத்தகம் வாங்கித்தர கெஞ்சுகிறாள் ஆனால் தாயோ அப்பாவுக்கு வருமானம் இல்லை இரண்டு

