meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Tuesday, June 14, 2011

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அதிசய வேறுபாடுகள்!


ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அதிசய வேறுபாடுகள்!
அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...
o பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
o ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
o குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

Wednesday, June 8, 2011

நரகத்தில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்!


(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன்,

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்


அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
‘இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். ‘உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்’ என்று அவன் கூறினான். ‘எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)’ என்று அவர் கேட்டார். ‘என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது’ என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன ?

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான்.  ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும்.  ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை..


பெங்களூர் MS. கமாலுத்தீன்

 
வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக்  கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான். போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக சம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். 
வான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்!அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும்,நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282) 

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!


வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.
Freelance Jobs