meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Wednesday, May 26, 2010

ஓர் அரசியும் பறவையும்..

முன்னுரை:
    சிறுவர்களுக்கு கதை சொல்கிறேன் என்ற பெயரில் கட்டுக்கதைகளை சொல்வதை விட அல்லாஹ் திருமறையில் சொல்லும் வரலாற்றுச் சம்பவங்களும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களும் ஏராளம் உள்ளன. அவற்றிலிருந்து சுலைமான் (அலை) அவர்கள் தொடர்பான வரலாற்றுச் சம்பவங்களை இங்கே தருகிறோம். இவற்றை சிறுபிள்ளைகளுக்கு இப்போதே சொல்லி வைப்பது நல்லது.
    சுலைமான் (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவர்கள் தாவூது (அலை) அவர்களின் மகனாவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.
    'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.
    அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான்.
    அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். பறவைகளின் மொழியை அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
    மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.
    கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
1. கண்காணிக்கும் பணி:
    ஒரு நாள் சுலைமான் (அலை) அவர்கள் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
    ஏனென்றால் பறவைகளை அல்லாஹ் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதாவது பறவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
    பறவைகளுக்கு சுலைமான் (அலை) அவர்கள் ஏதேனும் கட்டளையிட்டால் அவை உடனே நிறைவேற்ற வேண்டும்.
    அதற்காகவே அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு பறவைகளின் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.
    அவர்கள் பறவைகளின் கூட்டத்தை பார்வையிட்ட போது ஒரு பறவையைக் காணவில்லை, அதனால் சுலைமான் (அலை) அவர்கள்,
    'ஹுது ஹுது பறவை எங்கே போனது? அதை நான் காணவில்லை, சரியான காரணத்தை அது சொல்லவில்லை என்றால் நான் அதை தண்டிப்பேன் அல்லது கொன்று விடுவேன்' என்று கூறினார்கள்.

2. ஹுது ஹுது பறவையின் பதில்:
    சிறிது நேரத்தில் ஹுது ஹுது பறவை அங்கே வந்து சேர்ந்தது.
    'நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் கொண்டு வந்துள்ளேன்' என்று அந்த பறவை சொன்னது.
'ஸபாவிலிருந்து நான் உண்மை செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்' என்று தொடர்ந்தும் சொன்னது.
    அங்கே ஒரு பெண் அம்மக்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். அவளுக்குத் தேவையான எல்லாமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளிடத்தில் சிறப்பான அரியாசனமும் இருக்கிறது. ஆனால் அவளும் அவளைச் சார்ந்த மக்களும் அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக சூரியனை வணங்குகிறார்கள்.
    அவர்களுடைய இத்தவறான செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகானதாக காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். அதனால் அவர்கள் அல்லாஹ்வை வணங்க வில்லை.
    வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டாமா?
    அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை, அவன் மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன் என்றும் கூறியது.
3. சுலைமான் (அலை) அவர்களின் கடிதம்:
    சுலைமான் (அலை) அவர்கள் ஒரு கடிதத்தை ஹுது ஹுது பறவையிடம் கொடுத்து, அந்த ராணியிடம் கொடுத்து விடும் படி கூறினார்கள். அதில்
    ''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்று எழுதப்பட்டிருக்கிறது).

உலகின் முதல் மனிதர்

அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். அவர் தான் நம் எல்லோருக்கும் தந்தை, மூலத்தந்தை. 'ஆதம்' என்று அல்லாஹ் அவருக்கு பெயர் சூட்டினான்.

இன்று மக்கள் வேறுபட்ட நிறங்களிலும், வேறுபட்ட உருவ அமைப்பிலும், வேறுபட்ட மொழியை பேசுபவர்களாவும் உலகின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் மூலத்தந்தை ஒருவர் தான். அவர் தான் முதல் மனிதர் ஆதம் (அலை) ஆவார். அல்லாஹ் அவரை முதல் இறைத்தூதராக ஆக்கி, மனிதர்களுக்கு நல்வழி காட்டினான்.

Friday, May 21, 2010

Facebook and Others Caught Sending User Data to Advertisers

 Facebook and Others Caught Sending User Data to Advertisers
The Wall Street Journal is reporting on what could be a major scandal brewing for Facebook, MySpace and other social networks: despite assurances to the contrary, the sites have apparently been sending personal and identifiable information about users to their advertisers without consent.
Large advertising companies including Google’s DoubleClick and Yahoo’s Right Media were identified as having received information including usernames or ID numbers that could be traced back to individual profiles as users clicked on ads. The data could potentially be used to look up personal information about the user, including real name, age, occupation, location, and anything else made public on the profile. Both of the aforementioned companies denied being aware of the “extra” data they were receiving and claim they have not made use of it.
The WSJ goes on to report that since raising questions about the practice with FacebookFacebook and MySpaceMySpace, both companies have since rewritten at least some of the code that allowed transmission of identifiable data. Beyond those two companies, LiveJournal, Hi5Hi5, XangaXanga and DiggDigg made the list of sites identified as sending identifiable information back to advertisers when a user clicked on individual ads.
The Journal found that Facebook went farther than most in sharing identifiable data, by sending the username of the person clicking the ad as well as the username of the profile they were viewing at the time. This news could hardly come at a worse time for Facebook, a company that currently faces a privacy backlash potent enough to make the cover of Time Magazine this month.
Outside of Facebook, the other companies named in the article maintain the data they send to advertisers contains the user ID of the profile a user is visiting when they click on an ad, and not the user ID of the visitor themselves. Both Google and Yahoo made strong statements refuting the idea that they would ever make use of any such personally identifiable data. Yahoo VP of global policy Anne Toth said of the allegations, “We prohibit clients from sending personally identifiable information to us. We have told them. ‘We don’t want it. You shouldn’t be sending it to us. If it happens to be there, we are not looking for it.’”
What do you think: is this another privacy-related stain on Facebook as well as other social networks, or much ado about nothing?

Wednesday, May 19, 2010

உண்மையிலேயே சாதனைப் படைத்த மாணவி ஃபாத்திமா பானு

உண்மையிலேயே சாதனைப் படைத்த மாணவி ஃபாத்திமா பானு

காது கேளாத, பேசுவும் வராத பிள்ளையை பெற்றால், நாம் மிகுந்த கவலைக்கு உள்ளாகுவோம். ஆனால் தனது விடா முயற்சியால் எல்லா திறனும் பெற்று உள்ள மாணவிகளை விஞ்சும் அளவிற்கு வாய் பேச இயலாத, காது கேட்காத ஃபாத்திமா பானு சாதனைப் படைத்து இருக்கிறார்.
காசு, பணம் உள்ள பணக்கார தந்தைக்கு பிறந்தவரா என்றால் அதுவும் இல்லை. ஒரு கார் டிரைவரின் மகளாக பிறந்த அவர், அவர் தந்தையின் விடா முயற்சியால் இந்த வெற்றிக் கனியினை பறித்துள்ளார்.  சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முஹம்மது  அப்துல்லாஹ் நாகூர் மீரா தம்பதிகளுக்கு மகளாக ஃபாத்திமா பானு பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்கு பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். 

Thursday, May 13, 2010

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

 
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
 குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

1)      கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2)      வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3)      கலப்பற்ற பால்
4)      அருந்துபவர்களுக்கு இனிமை
5)      தாராளமாக புகட்டுகிறோம்

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா? 
1.  கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2.  வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
 
பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

Tuesday, May 11, 2010

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.

ஆமினா அசில்மி..................
 
ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.


"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி
ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

Saturday, May 8, 2010

இணைவைக்கும் என் சகோதரனுக்கு அழகிய அறிவுரைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இணைவைக்கும் என் சகோதரனுக்கு அழகிய அறிவுரைகள்

 
முன்னுரை
அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தியிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.

நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதரர்களிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகெட்ட மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது.

Thursday, May 6, 2010

அது ஒரு காகம்! (நீதிக்கதை)”

அது ஒரு காகம்! (நீதிக்கதை)”

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
Freelance Jobs